டோக்கியோ

ப்பான் பாராளுமன்றம் செப்டம்பர் 28 அன்று கலைக்கப்படும் என பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே இன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தை தன் இல்லத்தில் நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது :

”வரும் செப்டம்பர் 28 அன்று ஜப்பான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது.  வட கொரியாவின் மிரட்டலினால் தேர்தல் பாதிக்கப்படாது.  வரும் 2020ல் டோக்கியோ ஒலிம்பிக் திறம்பட நடக்கவே இந்த பாராளுமன்ற கலைப்பும் தேர்தலும்.   வரும் 2019ல் இருந்து நுகர்வு வரி 8%லிருந்து 10%ஆக அதிகரிக்கப்பட்டு அது 3-5 வயதுள்ள குழந்தைகள் நலனுக்கு செலவிடப்படும்”  எனக் கூறி உள்ளார்.

தற்போதைய ஜப்பானின் அரசியல் சூழ்நிலையில் தேர்தலில் அபேவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது என சில ஜப்பான் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.  சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவு இருப்பினும் டோக்கியோவின் பெண் கவர்னர் யூரிகோ கொய்கே புதுக் கட்சி ஆரம்பித்து பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அபேக்கு சிறிது பின்னடைவு எனவும் கூறுகின்றனர்.  ஆனால் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெரும் சமயத்தில் தான் பிரதமராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக ஜப்பான் மக்கள் கூறுகின்றனர்.