ஜார்கன்ட்,
ஜார்கன்டில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, அந்த ஆலையில் வேலை செய்துவந்த 8 பேர் தீயில் கருகி உயரிழிந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர இருப்பதையொட்டி, நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலைகளிலும் பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது.
ஜார்கண்டில் உள்ள குமார்துபி என்ற பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் ஆலையில் உள்ள பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.
இதன் காரணமாக ஆலையினுள் வேலை செய்துவந்த 8 பேர் தீயினால் பாதிக்கப்பட்டு பலியான தாக கூறப்படுகிறது. 25க்கும் மேற்பட்டோர் காயத்துடன் அருகிலுள்ள மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வண்டிகள் விரைந்துவந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலை தீவிபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.