வுகாத்தி

ஸ்லாமியர் வடிவமைத்த உலகின் மிகப்பெரிய துர்கை அம்மன் சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒற்றுமை குறைந்து ஆங்காங்கே இனக் கலவரங்கள் நடை பெருவது தெரிந்ததே.   அதே நேரத்தில் அசாம் மாநிலத்தில் 1975 முதல்  பல துர்கை அம்மன் சிலைகளை நூருதின் என்னும் ஒரு இஸ்லாமியர்  உருவாக்கி வந்துள்ளார் என்பது வியப்புக்குரிய  விஷயமாகும்.  இது குறித்து நமது பத்திரிகை.காம் ஏற்கனவெ செய்தி வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய துர்க்கை அம்மன் சிலை : கவுகாத்தியில் நடக்கப் போகும் சாதனை…

இந்த வருடம் நூருதின் கவுகாத்தியில் 101 அடி உயரமுள்ள துர்கை அம்மன் சிலையை உருவாக்கி உள்ளார்.  இது உலகத்தின் மிகப் பெரிய துர்கை அம்மன் சிலை என கின்னஸ் சாதனை புத்தகத்துக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது.

இது குறித்து நூருதின்,”மக்களில் பலர் நான் இஸ்லாமியராக இருந்தும் எவ்வாறு இந்துக் கடவுளர்களின் சிலைகளை செய்கிறேன் என கேட்ட வண்ணம் உள்ளனர். நான் இந்த சிலைகளை செய்யும் வேலையை 1975 முதல் செய்து வருகிறேன்.  என்னை பொறுத்தவரை கலைஞனுக்கு மதம் இல்லை.  எனது ஒரே மகம் மக்களின் சேவை மட்டுமே.  இந்த சிலை செய்ய சுமார் 5000 மூங்கில் கழிகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன” என கூறி உள்ளார்.

இந்த சிலை அமைப்புக் குழுவின் மேலாளர் தீப் அகமது, “இந்த சிலை உருவாக்கும் வேலை இரண்டு மாதம் முன்பு ஆரம்பிக்கப் பட்டது.   சுமார் 110 அடி உயரமுள்ள இந்த சிலை செப்டம்பர் 20ல் முடியும் என எதிர்பார்க்கப் பட்டது.  ஆனால் இந்த மாதம் 17ஆம் தேதி அடித்த புயலில் இந்த சிலை விழுந்து விட்டது.   நல்லவேளையாக யாரும் காயமடையவில்லை.  அதனால் சிறிது தாமதமாக செப்டம்பர் 25ஆம் தேதி வேலை முடியும் என எதிர்பார்க்கிறோம்.  எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து சமூக ஊடகங்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 27 முதல் துர்கா பூஜையின் நான்கு நாள் கொண்டாட்டம் தொடங்க உள்ளது.