லண்டன்
லண்டன் போக்குவரத்து அதிகாரிகள் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுத்துள்ளனர்.
உபேர் நிறுவனத்தின் டாக்சிகள் ஓட்டும் உரிமம் லண்டன் நகரில் முடிவடைய உள்ளதால் அதை புதுப்பிக்க அனுமதி கோரி இருந்தது. ஆனால் லண்டன் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் பொறுப்பற்ற நிர்வாகம் உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை சரியாக கவனிக்கவில்லை எனவும் காரணம் கூறி உரிமத்தை புதுப்பிக்க மறுத்து விட்டனர். மேலும் அதன் மொபைல் ஆப் அனைவரும் உபயோகப்படுத்தும் விதத்தில் இருப்பதால் பல குற்றவாளிகளும் அதை உபயோகித்து டாக்சியை வாடகைக்கு எடுக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகளின் முடிவை தாமும் வரவேற்பதாக லண்டன் மேயர் சாதிக் கான் கூறி உள்ளார். மேலும் டாக்சி நிறுவனத்தினர் சட்டத்தை மதிக்க வேண்டியது மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
உபேர் நிறுவனத்துக்கு மேல் முறையீடு செய்ய 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.