மதுரை:
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை யின்போது, வெளி மாநில மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் இடம்பிடித்தது தெரிய வந்தது.
இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இரட்டை இருப்பிட சான்று செல்லும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதுகுறித்து, திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த பொது நல வழக்கில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ள கருத்தில், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதை சரிபார்க்க சரியான நடைமுறை இல்லை. இரட்டை இருப்பிடச் சான்றிதழைப் பயன்படுத்தி, வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து விடுகிறார்கள்.
அதேப்போல, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், தமிழக மாணவ, மாணவிகளின் இடங் களை பிற மாநில மாணவர்கள் பிடித்து விடுகிறார்கள் என்றும், எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் இரட்டை இருப்பிட சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை பிறப்பிப்பதோடு, இது குறித்து 3 வாரத்துக்குள் சுகாதாரத் துறை பதிலளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.