“நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று பேசிப் பேசியே ஒரு உயிரை இழந்துவிட்டோம். நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்த பேட்டியும் அளிக்காதீர்கள்” என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளர்.
நீட் தேர்வு மற்றும் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் தொடர்பான வழக்குகளை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தெரிவித்தாவது:
“நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று பேசிப் பேசியே ஒரு உயிரை இழந்துவிட்டோம். நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்த பேட்டியும் கொடுக்காதீர்கள். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களை அடுத்த வருட தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக பயற்சி மையங்கள் அமைக்கப்பட்டு விட்டனவா? மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அரசு ஒரு மணி நேரம் கூட போதுமே” என்று நீதிபதி கிருபாகரன் கடுமையாக சாடினார்.
மேலும், “ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த கட்சிகள், அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதற்கு குரல் கொடுக்காதது ஏன்? நீதிமன்ற உத்தரவை சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? போராட்டத்தின் போது மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.