சென்னை,
பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சரும், டிடிவி ஆதரவாளருமான செந்தில் பாலாஜி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதலை தொடர்ந்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது காவல்துறையின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பழனியப்பனை, அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கூர்க் சொகுசு விடுதிக்கு சென்றபோது, அவர் தப்பிச்சென்று முன்ஜாமின் பெற்றார்.
அதைத்தொடர்ந்து போக்குவரத்துதுறையில் வேலை வாங்கிதருவதாக கூறி மோசடி செய்தாக தொடரப்பட்ட வழக்கில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பண மோசடி செய்ததாக கணேஷ் என்பர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையை காவல்துறையினர் துரிதப்படுத்தி உள்ள நிலையில், செந்தில்பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.