லக்னோ,

மாநிலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

உ.பி.யில் பாரதியஜனதா ஆட்சி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பலவேறு அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வரும் யோகி, தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறி உள்ளார்.

நேற்று உ.பி. மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது, மாநிலத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்து பேசப்பட்டது.

அப்போது பேசிய யோகி,  கள்ளச்சாரயம்காய்ச்சுவர்களைபிடிக்கதனிப்படைகள்அமைக்கப்பட்டுவருவதாகவும், கள்ளச்சாரயம்குடித்துபலியானால்அதற்குகாரணமானவர்களுக்குமரணதண்டனைவிதிக்கும்வகையில்சட்டத்திருத்தம்செய்யப்படும்என்றுஅவர்கூறினார்.

இதற்கானசட்டத்திருத்தம்விரைவில்மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.