தமிழக எம்எல்ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு சமூக வளை தளங்களில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவிடுகிறது. இந்நிலையில் ஒரு நெட்டிசன் புது பிரச்னையை கிளப்பும் வகையில் பதிவிட்டுள்ளார். அதன் விபரம்…
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1) (1) ஏ பிரிவின் படி முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின எண்ணிக்கை மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் மட்டுமே இருக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் தற்போது முதல்வர் உள்பட 33 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அதனால் யார் பலிகடா ஆக போவது என்பது தெரியவில்லை.
18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 215 ஆக குறை ந்துள்ளது. 215ல் 15 சதவீதம் என்பது 32 மட்டுமே. இதனால் தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. அதனால் எந்த அமைச்சர் பதவியை இழக்க விரும்புகிறார் என்பது கேள்விகுறியாகியுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக அமைச்சர்களின் எண்ணிக்கை இருக்கும் பிரச்னையை எதிர்கட்சியான திமுக நிச்சயம் எழுப்பும். நிச்சயம் இப்பிரச்னைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு எடப்பாடி என்ன சொல்ல போகிறார்?.