சென்னை:

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் அன்பழகன், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்பட எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் முதல்வர், சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. கவர்னர், சபாநாயகர், முதல்வர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவது கண்டனத்திற்குறியது.

அரசு விழாக்களை அரசியல் மேடையாக்குவதற்கும், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.