மதுரை:
மதுரையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீண்டாமை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 43 மாணவிகளுக்கு ரூ.3.40 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் 2011ம் ஆண்டு, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி வேலை செய்து வந்த பள்ளியில் படித்து வந்த 90க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
மாணவிகள் கொடுத்த புரையடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆரோக்கியசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக தீண்டாமை வன்கொடுமை நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தலைமையாசிரியர் ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 43 மாணவிகளுக்கு ரூ.3.40 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.