சென்னை,

மிழகத்தில்  துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இன்று (செப்.‘19) முதல் அக்டோபர் 7ந்தேதி வரை நடைபெறுகிறது..

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று  சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறுகிறது.

இன்று முதல், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது; இதில், 146 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 484 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், 5,479 இடங்களும் உள்ளன. இதற்கான தகுதி பட்டியல், அழைப்பு கடிதம் ஆகியவை, www.tnhealth.org, www.tnmedicalselcetion.org என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

அக்., 7 வரை, கவுன்சிலிங் நடக்கிறது

[youtube-feed feed=1]