சென்னை:

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக அறிவித்தார்.

இதையடுத்து சட்டசபை செயலர் பூபதி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் காலியாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக அரசின் இணையதளத்திலும் 18 எம்.எல்.ஏ.க்களின் பெயர்களும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]