திருச்செங்கோடு,

மிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கிய திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரிவிக்கப்படாது போலீசாரிடைய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலும், அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப் படாத அதிர்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினரும், சக போலீசாரும் கூறி உள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் விஷ்ணுபிரியா.  திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விஷ்ணுபிரியா இறந்து கிடந்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா  விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் அளித்த நெருக்கடி காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ‘

மேலும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் அளித்த நெருக்கடி காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக  அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி.யாக இருந்த மகேஸ்வரி, வழக்குரைஞர் மாளவியா ஆகியோர் குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டருந்த நிலையில், அவர் இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அதற்கான காரணம் தெரியவில்லை. இது அவரது குடும்பத்தினரிடையேயும், சக போலீசாரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.