மாயவரம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகள் துர்கா ஸ்டாலின் இன்று புஷ்கர பூஜை செய்துள்ளார்.
தென் இந்தியாவை வளமாக்கும் நதிகளில் ஒன்று காவேரி. அந்த நதிக்கரையில் புஷ்கர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது செப்டம்பர் 12 முதல் 24ஆம் தேதி வரை காவிரியில் நீராடுவது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. புஷ்கரம் என்பது குருபகவான் ஒவ்வோர் ஆண்டும் ஒரு ராசியிலிருந்து வேறொரு ராசிக்கு இடப் பெயற்சி செய்யும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுகிற விழா. மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்ம தேவனின் கமண்டலத்தில் வாசம் செய்யும் புஷ்கரம் என்பவர், குருப்பெயர்ச்சி நடக்கும் காலகட்டங்களில் 12 தினங்கள் இந்திய நதிகளில் வாசம் செய்யவதாக வரலாறு. காவிரி நதியின் ராசி துலாம் ஆக இருப்பதால் இந்த புஷ்கரவிழா 144 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதிக்கரைகளில் நடை பெறுகிறது.
கருணாநிதியின் மருமகளும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவியுமான துர்கா அடிக்கடி கோவிலுக்குச் செல்வார். அவர் இன்று மாயவரம் துலாக்கட்டத்தில் புஷ்கர பூஜை செய்ததாக இணையங்களில் பலரும் பதிந்துள்ளனர்.
திமுக தொண்டர்கள் பலரும் இன்று இணையத்தில் பெரியார் படங்களை பகிர்ந்து அவருடைய கடவுள் மறுப்பு மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பு கருத்துக்களை பகிரும் சமயத்தில் இது போல படங்கள் மற்றும் செய்திகள் வந்துள்ளது நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி பலரும் இதைக் குறித்து தங்கள் விமர்சனங்களை பதிந்து வருகின்றனர்.