திருவனந்தபுரம்:

மலையாள நடிகர் தீலிப் மனைவி காவியா மாதவன் முன் ஜாமீன் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மலையாள நடிகை பாவனா கடத்தல் மற்றும் தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் இறுதிகட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் மனைவி காவியா மாதவனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் காவியா மாதவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவில், ‘‘போலீசார் இந்த வழக்கில் என்னை சேர்க்க முயற்சி செய்கின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எனது டிரைவர் புல்சர் சுனி மூலம் போலி ஆதாரங்களை கொண்டு என்னையும் கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விசாரணை அதிகாரிகள் பல முறை என்னுடன் போனில் தொடர்பு கொண்டு வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் 3 முறை தள்ளுபடி செய்துள்ளது. நடிகை பாவனா கடத்தலில் திலீப் மூளையாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]