திஸ்பூர்,

பெற்றோர்களை பாதுகாக்கும் பொருட்டு அசாம் அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி  அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை வயதான காலத்தில் பாதுகாக்க மறுத்தால் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அசாமில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதல்வராக சர்பானந்தா சனோவால் உள்ளார்.

தற்போது மாநில அரசு  பதிய சட்டம்  இயற்றி உள்ளது. அதில், வயதான பெற்றோர்களை அவர்களது இறுதி நாட்களில் பாதுகாக்க மறுத்து,  முதியோர் விடுதியில் சேர்த்து வடுகின்றனர் பலர். இதன் காரணமாக நாடு முழுவதும் முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வயதான பெற்றோர்களை பாதுகாக்க அசாம் அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி,  அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால் ஊதியத்தில் 10 முதல் 15  சதவிகிதம் பிடிக்கப்படும் என்று அஸ்ஸாம் அரசு புதிய சட்டத்தை நிறை வேற்றியுள்ளது.

வயதான பெற்றோர்கள் மற்றும் ஊனமுற்ற சகோதரர் மற்றும் சகோதரிகள் இருந்தால் அவர்களை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அவர்கள் கவனிக்க மறுக்கும் பட்சத்தில் அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பணத்தின் மூலம் அவர்களது பாதுகாப்பு உறுதி செய்ய இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம்   முதற்கட்டமாக அரசு ஊழியர்களிடம் அமல்படுத்தப்படுகிறது. அதையடுத்து, தனியார் துறை உள்பட பொதுத்துறை அதிகாரிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.