மதாபாத்

ப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தனது தாத்தா ஜவகர்லால் நேருவுடன் நட்பாக இருந்தது போல் தமது நட்பும் தொடரும் என உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டுடன் இந்திய நட்பு நெடுங்காலமாக உள்ளது.  தற்போது இந்தியா வருகை தந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே இது பற்றி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது :

”இந்தியாவுடனான இந்த நட்பு வெகுகாலமாக தொடர்ந்து வருகிறது.  இரண்டாம் உலகப் போருக்கு பின் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு ஜப்பானின் முதல் பிரதமர் இந்தியாவுக்கு வந்தார்.   அவர் எனது தாத்தா நொபுசுகே கிஷி.  அப்போது இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு என் தாத்தாவை அன்புடன் வரவேற்றார்.  அவருடன் பொதுக் கூட்டங்களில் கலந்துக் கொண்டார்.

அப்போது போரில் தோற்றுப் போய் சிறிது சிறிதாக முன்னுக்கு வந்துக் கொண்டிருந்த நாடு ஜப்பான்.  அதை மக்களுக்கு தெரிவித்த நேரு, எனது தாத்தாவை எனது நாட்டுக்கு முன்னோடியாக நான் நினைக்கும் நாட்டின் பிரதமர் என அறிமுகம் செய்து வைத்தார்.   அதில் நெகிழ்ந்து போன எனது தாத்தாவும், ஜப்பான் நாடும் இந்தியா எங்களுக்கு என்றுமே நட்பு நாடு என முடிவு செய்து விட்டார்கள்.  நானும் என்றென்றும் இந்தியாவுடன் நட்புறவுடன் இருப்பேன்.  இந்த ஜப்பான் – இந்திய நட்பு நிச்சயமாக இரு நாட்டையும் விரைவில் மேலும் முன்னேற்றும்” என ஜப்பான் மொழியில் உரையாற்றினார்.

மோடி இதற்கு பதிலளிக்கையில், “எனக்கும் ஜப்பானுக்கும் உள்ள நட்பு இன்று நேற்று உருவானது இல்லை.  நான் குஜராத் முதல் முறையாக ஜப்பான் சென்ற போதே நான் குஜராத்தை ஒரு குட்டி ஜப்பானாக பார்க்க வேண்டும் என நினைத்தேன்.  இப்போது அது உண்மையாகி உள்ளது.  பல ஜப்பான் நண்பர்கள் இங்கு குஜராத்தில் வந்து வர்த்தகம் செய்வது எனக்குப் பெருமையாக உள்ளது.  ஜப்பானிய நகரக் கட்டமைப்பு என்பது மிகவும் அருமையானது.  இன்று கூட ஒரு ஜப்பானிய பாணி நகரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  குஜராத் அரசு நிச்சயம் ஜப்பானியர் வருகையாலும் அவர்கள் பங்களிப்பாலும் நிச்சயம் ஒளிரும்.   ஜப்பான் நாட்டில் இந்த நட்பானது விரைவில் இரு நாடுகளையும் உலகத்தின் மிகப் பணக்கார நாடாகவும் அதிக வர்த்தகம் நடைபெரும் நாடாகவும் மாற்றும் என்பதில் ஐயமிலை.  ஆசிய கண்டத்துக்கே இந்த இரு நாடுகள் பெருமை தேடித்தரும்.  ஜப்பானிய பிரதமர், மற்றும் ஜப்பானின் நட்பு இருநாடுகளுக்கும் பரஸ்பர நட்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் அளிக்கும்” என உணர்ச்சி பொங்க கூறினார்.