சென்னை:
விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ தமிழ் கன் இணையளத்தில் வெளியானது
புதிதாக வெளியாகும் திரைப்படங்களை உடனடியாக ஆன்லைனில் வெளியிடும் செயலை சில இணைய தளங்கள் செய்து வருகின்றன. இதை மக்கள் பலரும் டவுன்லோடு செய்து திரைப்படங்களை பார்ப்பதால் திரையரங்குகளில் வசூல் பாதிக்கப்படுவதாக திரைத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ மற்றும் ‘தமிழ் கன்’ ஆகிய இணையதளங்களை நிர்வகித்து வந்த 4 பேரை போலீசார் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று சமூக வளைதளங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் இன்று வெளியானது. இது உடனடியாக ‘தமிழ் கன்’ இணையதளத்தில் வெளியானது. இது திரைத்துறையினர் மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.