சென்னை,
சிலை கடத்தில் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த போலீஸ் காதர்பாட்சா கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை கோயம்பேடு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கைது செய்துள்ளார்.
சுமார 9 கோடி ரூபாய் மதிப்பிலான 3 சிலைகளை தாய்லாந்து நாட்டுக்கு கடத்தப்பட்ட விவகாரத்தில், தேடப்பட்டு வந்த போலீஸ் டிஎஸ்பி காதர் பாஷ் தலைமறைவாக இருந்து வந்தார்.
அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தலைமறைவாக கும்பகோணத்தில் இருந்தது வந்தது தெரிய வந்தது. அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2008 ம் ஆண்டு விருதுநகர் அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் விவசாய நிலத்தில் இருந்து 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை தனது சக போலீசார் உதவியுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டி, விவசாயிடம் இருந்து கைப்பற்றினார் டிஎஸ்பி காதர்பாஷா.
பின்னர் அந்த சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் 15 லட்ச ரூபாய்க்கு விற்றார். அவர் அதை தாய்லாந்து நாட்டிற்கு கடத்தி விட்டார். சிலையின் தற்போதைய மதிப்பு 9 கோடி ரூபாய்.
இந்த விவகாரம் குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையில் விசாரணை குழு அமைக்கப் பட்டது. அதைத்தொடர்ந்து பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிலையை கொடுத்தது டிஎஸ்பி காதர்பாஷா என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்செது விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காதர் பாஷாவுடன் இணைந்து சிலையை கொள்ளையடித்த காவலர் சுப்புராஜ் (தற்போது கோயம்பேடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதையறிந்த தற்போது டிஎஸ்பியாக காதர்பாஷா தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் படலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கும்பகோணத்தில் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.