டில்லி

ந்த மாத இறுதிக்குள் அனைத்துக் கிளைகளிலும் ஆதார் இணைப்பு மையம் தொடங்காத வங்கிகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அனைத்து பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஆதார் இணைப்பு மையங்களை அமைக்க வேண்டும் என சொல்லி இருந்தது.  அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் இறுதி என சொல்லப்பட்டிருந்தது.  பல வங்கிகளும் இந்தக் காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது,

இந்த மையம் 10 கிளைகளுக்கு ஒரு கிளையில் தொடங்கப்பட வேண்டும் என ஆதார் நிறுவனம் தெரிவித்திருந்தது.   அதாவது 100 கிளைகள் கொண்ட ஒரு வங்கியில் 10 கிளைகளில் இந்த ஆதார் இணைப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்.   வங்கிகள் மீண்டும் காலக் கெடுவை நீட்டிக்க கோரியதாக சொல்லப்படுகிறது.

ஆதார் நிறுவனம் மேலும் கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது எனவும்,  அப்படி அமைக்காத ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் ரூ. 20000 ஒவ்வொரு மாதமும் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.   அதாவது ஐந்து கிளைகளில் ஆதார் இணைப்பு மையம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அமைக்கப்படவில்லை என்றால் அந்த வங்கி ரூ. 1 லட்சம் அபராதமாக செலுத்த நேரிடும்.