சென்னை,

சென்னை வானகரம்  ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதையொட்டி அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் காரணமாக  அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வானகரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு, அதை சுற்றியுள்ள மதுரவாயல், வானகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]