
சென்னை,
தமிழகத்தில் குற்றம், குற்றச் செயல்களில் ஈடுபடுதல், திருட்டு, தொலைந்துபோன ஆவணங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் தனி இணையதளத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழக காவல்துறை.
http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0
இந்த இணையதளத்தில் பயனாளர்கள், தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என காவல்துறை அறிவித்து உள்ளது.
இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது தொலைந்துபோன வாகனங்கள் குறித்தும் புகார் செய்யலாம்.
வாகன ஓட்டிகள் தங்களது ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்திருந்தாலோ, திருடு போயிருந்தாலோ அதுகுறித்தும் இந்த வலைளதத்தில் புகார் செய்து, மீண்டும் புதிய ஓட்டுனர் உரிமம் வாங்கலாம் என தமிழக காவல்துறை தெரிவித்திருந்தது.
Patrikai.com official YouTube Channel