வாஷிங்டன்,
அமெரிக்கா அதிபராக ஒபாமா இருந்தபோது, சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குள் சட்ட விரோத மாகக் குடியேறுபவர்கள், வளர்ந்த பின்னர் அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கு அனுமதி அளிக்கும் வகையில், டிஏசிஏ என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
இந்த சட்டம் ரத்து செய்வதாக கூறப்பட்டதற்கு முன்னாள் அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க செனட் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த டிஏசிஏ சட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்திய வம்சாவளியினர் சுமார் 7 பேர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதுபோல ஒபாமா கொண்டுவந்த பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்தும், ரத்து செய்தும் வருகிறார்.
இந்நிலையில், அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது அமெரிக்க குடியுரிமைச் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக சிறுவயதிலேயே அமெரிக்கா வுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள், வளர்ந்த பின்னர் அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கான அனுமதி அளிக்கும் வகையில், டிஏசிஏ எனப்படும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
தற்போது இந்த சட்டத்தை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றன.
டிஏசிஏ சட்டம் ரத்து செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்தவுடன், ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அதிபர் டிரம்ப்-க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சட்டத்தை டிரம்ப் ரத்து செய்யப்படும் பட்சத்தில் சுமார் 7000 இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 8 லட்சம் வெளிநாட்டினரும் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்த சட்டம் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.