சென்னை,

ன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், எடப்பாடியுடன் பேச்சே கிடையாது. அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும், தங்களுக்கு 35 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும்  டிடிவியின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் எம்எல்ஏ கூறினார்.

இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக 109 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் கூறியதாவது,

தற்போதுள்ள சூழ்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது  குறித்து தினகரன் முடிவு செய்வார் என்றும், சபாநாயக்ர  நோட்டீஸ் குறித்து விளக்கமளிக்க 3 எம்எல்ஏக்கள் மட்டுமே சென்னை சென்று சபாநாயகரை சந்திப்பார்கள் என்றும் கூறினார்.

மேலும் தங்களிடம்  .’ஸ்லீப்பர் செல்க’ளையும் சேர்த்து  35 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும்,  பெரும்பான்மை இருந்தால் சட்டசபையில் முதல்வர் நிருபிக்க வேண்டியது தானே. முதல்வர் தலைமையில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டம் செல்லாது என்றார்.

மேலும், மாணவி அனிதா குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஏன் செல்லவில்லை. மாணவி மரணத்திற்கு அரசே காரணம். எடப்பாடி அணியுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.