சென்னை:

6ம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் ஒரிஜினல் ஒட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரிஜினல் ஓட்டுனர் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

விசாரணையை தொடர்ந்து வாகன ஓட்டுனர்கள் 6ம் தேதி முதல் கட்டாயம் ஒரிஜினம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதை பத்திரமாக வைத்திருப்பது நமது கடமை. மழை மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பதும் நமது கடமை. தவறுபவர்களுக்கு ரூ. 500 அபராதமும், அல்லது 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.