லக்னோ:

கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த டாக்டர் கபீர் கான் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயின. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோக சம்பவம் காரணமாக டாக்டர் கபீர்கான் என்பவரை அரசு சஸ்பெண்ட் செய்திருந்தது.

இதுகுறித்து மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருந்து. இந்நிலையில் குழந்தைகள் சாவுக்கு காரணம் என கூறி குழந்தைகள் மருத்துவர் கபீர் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து  மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஆர்.கே மிஸ்ரா மற்றும் கபீர் கான் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மருத்துவர் கபீர்கானை இன்று காலை திடீரென்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பக்ரீத் பண்டிகையான இன்று அவர் கைது செய்யப்பட்டிருப்பது உ.பி.யில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.