
டில்லி
மூத்த ஐ ஏ எஸ் அதிகாரியான ராஜிவ் கவுபா மத்திய உள்துறை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 1958ல் பிறந்தவர் ராஜிவ் கவுபா. பாட்னா பல்கலைக்கழகத்தில் பவுதீகத்தில் பட்டப் படிப்பு பயின்றவர். சென்ற வருடம் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப் பட்டார். அதற்கு முன்பு ஜார்க்கண்ட் மாநில உள்துறை செயலாராக பணியாற்றி வந்தார். அத்துடன், உள்துறை, நிதித்துறை போன்ற பல துறைகளில் பணி புரிந்தவர். தற்போது மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிவ் கவுபா உள்நாட்டு பாதுகாப்பு, வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் தீவிரவாத ஒழிப்பு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளின் பிரச்சினைகள் போன்றவற்றை கவனித்துக் கொள்வார்.
Patrikai.com official YouTube Channel