சென்னை,
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல அதிரடி தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் சைதை துரைசாமியை நீக்குவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்று சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சைதை துரைசாமி பல அதிரடி அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக டிடிவி தினகரன் எங்கிருந்தார் என்று கேள்வி எழுப்பிய சைதை துரைசாமி, டிடிவி தினகரனின் முரண்பட்ட தகவல்கள், அவரது செயல்பாடுகள் அளவுக்கு மீறி போய்விட்டது என்று அதிரடியாக குற்றம் சாட்டினார்.
மேலும் கட்சிக்கு துரோகம் செய்வது வருவது யார் என்று அதிமுக தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரியும் என்றும்,
முதல்வர் ஜெயலலிதா வீட்டில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது குறித்தும், பின்னர் சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து ஜெயலலிதாவுடன் இணைந்தது குறித்தும் விரிவாக கூறினார். அப்போது, சசிகலா எழுதிய கடிதத்தை வாசித்து.. அதில் குறிப்பிட்டுள்ளதை நினைவு கூர்ந்தார்.
சசிகலா எழுதிய மன்னிப்பு கடிதத்தில், என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் சிலர் நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை வைத்து, அதை பயன்படுத்தி விருப்ப தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறியதையும் சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதா மறைந்தபிறகு கட்சி பிரிந்தது. தற்போது நான் எந்த அணியிலும் இல்லை.
டிசம்பர் 15 க்கு பிறகு கட்சி பணிகளில் ஈடுபடுவதில்லை. கல்வி பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதன் காரணமாகவே சசிகலா எனக்கு அளித்த பதவியை நிராகரித்ததேன் என்றும், பிளவு பட்ட அணிகளில் நான் இருக்க மாட்டேன். ஒன்றுபட்ட அதிமுகவில் மட்டுமே நான் இருப்பேன் என்றும் கூறினார்.
நான் நடுநிலையாளர் என்பதால், எந்த அணியிலும் சேராமல் தமிழக அரசியல் குறித்து கவனித்துகொண்டிருந்தேன்.
ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தது வரவேற்கத்தக்கது என்றும், ஆட்சி,கட்சி, தொண்டர்களும், பொதுமக்களும் விரும்புகிற வகையில் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், புரட்சி தலைவர் காலத்திலேயே ஓபிஎஸ், இபிஎஸ் கட்சியில் இருந்து வந்துள்ளார்கள். இவர்களின் முழுமையான செயல்பாட்டின் மூலம், மக்கள் விரும்பத்தக்க வகையில் ஆட்சியை யும், கட்சியையும் நடத்துவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.