
சண்டிகர்:
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராமுக்கு இன்று தீர்ப்பு விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதன் காரமாக அரியானாவின் பஞ்ச்குலா, சண்டிகர், மொஹாலி ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தனது பெண் சீடர்களால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வழக்கு பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகாலமாக விசாரணை செய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை, சாமியார் குற்றவாளி என அரியான நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அதற்கு தீர்ப்பு விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதி மன்றம் அறிவித்தது.
இதன் காரணமாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் கலவரம் வெடித்தது. இதில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட இருக்கிறது.
இதற்காக சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங் ரோதக் சிறைக்கு செல்கிறார். நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் சிறை வளாகத்திற்குள்ளேயே நடத்தி முடிக்கப்பட உள்ளன.
இதனால் கலவரம் ஏற்படாமல் தடுக்க அரியானாவின் பஞ்ச்குலா, சண்டிகர், மொஹாலி ஆகிய முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநிலப் போலீசாருடன் இணைந்து, ராணுவத்தினரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
[youtube-feed feed=1]