சென்னை:
தமிழகத்தில் திருப்புமுனையாக ஸ்டாலின், தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பரமணிய சாமி தெரிவித்தள்ளார்.
தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், தினகரன் தலைமையில் ஒரு அணியுமாக செயல்பட்டு வருகின்றன. முதல்வர் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். முதல்வரை மாற்ற வேண்டும் என தினகரன் தரப்பினர் கவர்னரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.
திமுகவினருக்கு கவர்னரை சந்தித்து சட்டசபையை கூட்டி முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்நிலையில் வழக்கம் போல் சுப்பிரமணிய சாமி டுவிட்டர் மூலம் ஒரு புது குண்டை போட்டுள்ளார். அதில். தமிழகத்தில் திருப்புமுனையாக ஸ்டாலின், தினகரன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள். இது விரைவில் சில நாட்களில் நடக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தினகரன் வசம் தற்போது 22 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில் சுப்ரமணிய சாமியின் இந்த குண்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.