சென்னை,
எடப்பாடி அணியில் இருந்து மற்றொரு எம்எல்ஏ டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி டிடிவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எடப்பாடி அணி அதிர்ச்சி அடைந்து உள்ளது.
ஓபிஎஸ்- இபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் இணைந்ததை தொடர்ந்து, ஓபிஎஸ்-சுக்கும், மா.பா. வுக்கும் அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டது. கட்சியில் இருந்து டிடிவியையும் சசிகலாவையும் எடப்பாடி நீக்கியதாலேயே இந்த இணைப்பு நடைபெற்றது.
இதற்கு டிடிவி ஆதரவு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு எதிராக கவர்னரை சந்தித்து, முதல்வரை மாற்றம் வேண்டும் என்று கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக சென்றுவிடக்கூடாது என கருதி, டிடிவி தரப்பு அவர்களை புதுச்சேரிக்கு அழைத்துச்சென்று உல்லாச விடுதியில் தங்க வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி டிடிவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் பலம் 20 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய, ரத்தினசபாபதி, 6 பேர் கூடி மட்டுமே முக்கிய முடிவு களை எடுக்கிறார்கள் எனவும், எம்.எல்.ஏக்களை கலந்தாலோசிக்க மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ளார்.