திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்னைக்கு சந்திச்சு நலம் விசாரிச்சிருக்காரு. நீண்ட நாளைக்குப் பிறகு ரெண்டு பேரும் சந்திச்சிருக்காங்க… இதனால ரெண்டு கட்சியும் கூட்டணி வச்சுக்குமா, திமுகவுலேயே மதிமுக இணைஞ்சிருமான்னு ஆளாளுக்கு ஏதேதோ சொல்றாங்க.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
கருணாநிதியை சந்திச்சிட்டு வந்த வைகோ செய்தியாளர்கள்கிட்ட ரொம்ப உருக்கமா நெகிழ்வா பேசினாரு..
“ 29 வருசமா கருணாநிதியோட நிழலா இருந்தேன்… ஒரு துரும்புகூட அவர் மேல படாம பார்த்துக் கிட்டேன். நான் ஈழத்துக்கு போனப்போ, என் தம்பியை பறிகொடுத்து தவிக்கிறேன்னு கலங்கிப் போயி கருணாநிதி சொன்னாரு… என்று என் மனசோட அடி ஆழத்தில கருணாநிதி இருக்காரு… முரசொலி பவள விழாவுல கலந்துக்குவேன்” அப்படின்னு வைகோஉணர்ச்சிகரமா பேசினாரு.
இடையில, “ரெண்டு மாசமா கருணாநிதி என் கனவுல தினமும் வந்துகிட்டே இருக்காரு… ஏன்னு தெரியலே”னு உருகிப்போயி சொன்னாரு.
அது என் மனச ரொம்பவே பாதிச்சிருச்சு. கருணாநிதி, வைகோ ரெண்டு பேருமே பெரிய தலைவருங்க.. அதுவும் பாசத்துக்கு பேர் போனவரு வைகோ… அவரு, “ஏன்னு தெரியலே”னு சொன்னவுடனே மனசுக்கு கஷ்டமா போச்சு.
உடனே பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசனை போன்ல பிடிச்சேன்.. இவரு, அரசியல் தலைவருங்க பலருக்கு ஜோசியம் பார்க்கறவரு… அரசியல் கணிப்புகளையும் அப்பப்போ பரபரப்பா வெளியிடுவாரு.
அவருகிட்ட, “அய்யா, வைகோவோட கனவுக்கு என்னங்கய்யா அர்த்தம்”னு கேட்டேன்.
கொஞ்ச நேரம் யோசிச்ச அவரு, “பகல் கனவு பலிக்காதுன்னு எல்லாருக்கும் தெரியும். அதே நேரம் இரவு நேரத்துல காணற கனவுகளுக்கும் நேரம் பொறுத்து பலன் அமையும். அதாவது விடியற் காலையில காணுற கனவு அப்படியே பலிக்கும். அதே மாதிரி முன்னிரவு பி்ன்னிரவு கனவு பலன்கள் மாறுபடும்.
அதனால் வைகோ கனவுல எந்த நேரத்துல கருணாநிதி வந்தாருன்னு தெரிஞ்சாத்தான் உறுதியான பலன் சொல்ல முடியும்.
தவிர கனவுல எந்த இடத்துல சந்திச்சாங்க அப்படிங்கிறதும் முக்கியம். கனவுகளுக்கு நிறம் கிடையாதே தவிர இடம் வரும் இல்லையா.. அதனால சந்திச்ச இடம் பூங்கவா, கோயிலா, சினிமா தியேட்டரா, வீடா.. அப்படின்னு சொல்லணும்.
ஆனா… இரண்டு மாசமா ஒருத்தர் நம்ம கனவுல வர்றாருன்னா இருவருக்கும் பிரிவு ஏற்படும்னு பொதுவா அர்த்தம்” – அப்படின்னு சொல்லி முடிச்சாரு பாலாஜி ஹாசன்.
அப்பாடா.. ஒரு எக்ஸ்ளூசிவ் நியூஸ் கொடுத்த திருப்தி எனக்கு.. வரட்டா!
- இப்படிக்கு.. உங்கள்… ரவுண்ட்ஸ்பாய்!