“படக் படக்”குனு கட்டிப்புடிக்கிறான்யா… பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் சிநேகன் பற்றி இப்படித்தான் தமிழ்நாடு முழுக்க பேச்சு.
இப்படி கட்டிப்பிடிப்பது.. அதாவது ஆரத்தழுவி ஆறுதல் சொல்வது சிநேகனுக்கு கட்டிப்பிடித்து பாசத்தைக் கொட்டுவது சிநேகனுக்கு புதிதல்ல. “கட்டிப்பிடி திருமணங்களையே” நடத்தி வைத்தவர் சிநேகன். இதை டைனமிக் திருமணம் என்றார் சிநேகன். அப்போது, “மணமகளையும் கட்டிப்பிடித்து வாழ்த்துகிறாரே” என்று விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து .. அதாவது கட்டிப்பிடிப்பது குறித்து … சிநேகன் அப்போது பெரிய விளக்கமே அளித்தார்:
“நாங்கள் நடத்துவது டைனமிக் திருமணம். இதில் ‘கட்டிப்புடி’ விசயம் மட்டுமே பரபரப்பாகிவிட்டது. எங்களது டைனமிக் அமைப்பின் முக்கிய நோக்கம் மனிதர்கள் தங்களை பற்றி தாங்களே அறிந்து கொள்ளச் செய்வது, அதன் மூலம் மன வலிமை கூடி மொத்த சமூகத்திற்கும் பயனுள்ளதாக மாற்றுவது,மூட பழக்க வழக்கங்களை ஒழித்து மனித சமூகத்தை நாகரீக அமைப்பாக மாற்றுவது.
இதற்கென்று ஐந்து கட்ட பயிற்சி உண்டு. இந்த பயிற்சிகளில் சமூகத்தை இந்த அமைப்பினரின் இல்லத் திருமணங்கள் முழுக்க, தந்தை பெரியாரின் சுயமரியாதை திருமண முறைப்படி நடத்தப்படுகின்றன. வேத மந்திரங்கள் கிடையாது,வரதட்சணை கிடையாது. இது போன்ற பல சீர்திருத்தங்கள் இதில் அடங்கும். அதில் ஒரு அங்கமாகத்தான் வாழ்த்துக்களை ஒருவரை ஒருவர் தழுவி பரிமாறிக் கொள்கிறார்கள்.இது தான் இப்போது சர்ச்சைக்குரிய விசயமாகி இருக்கிறது” என்றார்.
“இந்த தழுவுதல் ஒரு சமூக ஒழுக்கப் பிழையை நோக்கி எடுத்துச் சென்று விடாதா?..” என்று கேட்கப்பட்டது. அதற்கு சிநேகன், “அப்படி ஆகாது. தழுவுதல் என்பது ஒரு உயிரினச் செயல்.மனிதனும் ஒரு உயிரினமே.
தழுவுதலின் போது மனிதர்களிடையே அன்பும்,பாதுகாப்பு உணர்வும் அதிகரிப்பதாக மனவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். மனிதர்களிடையே இயல்பாக நடைபெற வேண்டிய இந்த தழுவல்கள் ஒரு பாலின உணர்ச்சியாகவும், ஆபாச நடவடிக்கையாகவும் நம் சமூகத்தில் பார்க்கப் படுகிறது. இதை மறுபடியும் இயல்பான ஒரு செயலாக மாற்றவே இந்த முயற்சி. இதை சரியான முறையில் பார்ப்பதற்கும்,செயல் படுத்துவதற்கும் இந்த பயிற்சி வகுப்புகளில்சொல்லித்தரப்படுகிறது. எங்கள் அமைப்பினர் இதில் தெளிவாகவே உள்ளார்கள். இதை ஒரு செக்ஸ் நடவடிக்கையாக பார்ப்பது அவரவர் மனோபாவத்தை பொறுத்தது”என்று அப்போது சொன்னார். சிநேகன்.