அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் பரபரப்பான சூழல் நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்டிவிட்டர் பக்கத்தில், “காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர் குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் .
போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா.” என்று பதிவிட்டுள்ளார்.
காவிக்குல்லா என்று கமல் கூறியிருப்பது, மத்திய பாஜக அரசு ஆட்டுவிக்கும்படி அதிமுகவின் இரு அணிகளும் இயங்குகின்றன என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.