மும்பை:

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட பின் பிரிவினைவாதிகள் போதிய பணம் கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர் அருண்ஜெட்லி கூறினார்.

மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண்ஜெட்லி பேசுகையில், ‘‘ பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்ட பின் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் போதிய பணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

மத்திய அரசு ரூபாய் நோட்டு வாபஸ் பெறுவதற்கு முன்னர் காஷ்மீரில் போராட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் கூடுவார்கள். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு பின் 20, -25 பேர் கூட போராட்டத்திற்கு வருவதில்லை. நாட்டின் நலன் கருதி 2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது’’ என்றார்.