சென்னை:
ஓ.பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதனால் இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த இணைப்பு நடக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் இன்று திடீரென மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வமும், எடப்பாடியும் ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இணையவுள்ளனர் என்ற பேச்சு பரவலாக உள்ளது.
Patrikai.com official YouTube Channel