சென்னை,
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காற்று வீசத்தொடங்கியதால், அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் இருந்து மின் உற்பத்தி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வரும் நிலையில், காற்றாலை மின்சால உற்பத்தியும் அதிகரித்திருப்பது மேலும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
தமிழத்தில் மின் தேவையில் 25 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது. நேற்று தமிழகத்தில் காற்றாலை மூலம் 33,237 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது.