சென்னை,
முதல்வர் எடப்பாடி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்திருப்பது கண்துடைப்பு என்று திமுக கருத்து தெரிவித்து உள்ளது.
காலம் தாழ்த்தி விசாரணை கமிஷன் அமைத்திருப்பது கண் துடைப்பு என்று திமுக முதன்மை செயலர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக இணைப்புக்கு போடப்பட்ட நிபந்தனையை ஏற்று நீதி விசாரணை அமைக்கப்பட்டுள்ளது என்றும், பதவியில் இருக்கிற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கலாம் என்றும் திமுக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, பாஜக அழுத்தத்தால் தான் முதல்வர் பழனிசாமி, 2 அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்றும், முதல்வரின் அனைத்து செயல்படுகளுக்கு பின்னாலும் பாஜகவின் அழுத்தம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
விசாரணை கமிஷனை திமுக கேட்ட போது அமைக்கவில்லை. தற்போது பா.ஜ., விருப்பப்படி சசி குடும்பத்தை ஓரங்கட்ட கமிஷன் அமைக்கப்படுகிறது. பா.ஜ.வின் அச்சுறுத்தல் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கிறோம். விசாரணை கமிஷன் அமைத்து யார் வீட்டு பணத்தை செலவு செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.