சென்னை,
முதல்வர் எடப்பாடியின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு முடிவுக்கு வரும் சூழல் உருவாகி உள்ளது. ஓபிஎஸ்சின் தர்ம யுத்தத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்றுகூறியுள்ளார்
இந்நிலையில், இரு அணிகள் இணைப்பு குறித்து வெளிப்படையாக பேச நேரம் வந்துவிட்டது என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் டுவிட் செய்துள்ளார்.
மேலும், இரு அணிகளின் இணைப்பு குறித்து வெளிப்படையாக பேசுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் இருந்து சசிகலாவை எதிர்த்து பிரிந்துவந்த ஒபிஎஸ், அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ம யுத்தம் தொடரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் 90 சதவிகித கோரிக்கைகளை எடப்பாடி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மாஃபா பாண்டியராஜன் தனது டிவிட்டர் பதிவில் ஓ.பி.எஸ் அணியின் மூன்று கோரிக்கைகளையும் எடப்பாடி பழனிசாமி அணி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் ஓ.பி.எஸ் அணியின் தர்ம யுத்தத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
இரு அணிகளின் இணைப்பு குறித்து வெளிப்படையாக பேசுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.