திருச்சி,
தமிழக விவசாயிகள் மாநிலம் முழுவதும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவை தவிர எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
தேனியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் அருகே திருவாரூரில் கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் பயிர்க் கடன்களை உடனே தள்ளுபடிசெய்ய வேண்டும் என்றும், வறட்சியால் பதிக்கப்பட்ட அத்தனை விவசாயிகளுக்கும் பாரபட்சம் பார்க்காமல் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம்மூலம் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தமிழகம் முழுவதும் ஏற்பாடுசெய்திருந்த இந்தப் போராட்டத்தில்,அனைத்து கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.