
பரேலி, உ.பி.
உத்திரப் பிரதேசத்தில் மதரசாக்களில் சுதந்திர தின விழா கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. தங்களின் தேசபக்திய சந்தேகப்பட்டதற்காக முதல்வர் யோகிக்க் இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்ற வாரம் உ. பி. அரசு அனைத்து மதரசாக்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் அனைத்து மதரசாக்களும் சுதந்திர தின விழாவைக் கொண்டாடி அந்த வீடியோ பதிவை சிறுபான்மை நல அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது இஸ்லாமிய மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது. தங்களை இந்த அரசு தேச பக்தி இல்லாதவர்கள் என அரசு சித்தரிப்பதாக இஸ்லாமியர்கள் கருதினர்.

இந்நிலையில் நேற்று மாநிலத்தில் உள்ள பல மதரசாக்களில் தேசிய் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது போல விழா நடத்துவது வழக்கமான ஒன்றுதான் என இஸ்லாமியரால் சொல்லப்பட்டது. சில இடங்களில் மட்டும் மாணவர்கள் அதை மொபைல் மூலம் வீடியோ பதிவு செய்தனர். ஆயினும் மதரசா அலுவலர்கள் தங்களின் தேசபக்தி இப்படி பரிசோதிப்பது வேதனையானது என வருந்தினர்.
பரேலி, கான்பூர் ஆகிய இடங்களில் உள்ள மதரசாக்களில் விமரிசையாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட போதிலும் ப்ல இடங்களில் வீடியோ பதிவு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் பல மதரசாக்களில் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலுக்கு பதில்”சாரே ஜஹான் சே அச்சா” என்ற பாடல் இசைக்கப்பட்டது. சில இடங்களில் ஜன கண மன பாடல் இசைக்கப்பட்டது.
மதரசா நிர்வாகிகள், ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினமும், குடியரசு தினமும் தாங்கள் கொடி ஏற்றி கொண்டாடி வருவதாகவும், தற்போதுள்ள யோகியின் அரசு தேவை இல்லாமல் தங்களின் தேச பக்தியை சந்தேகப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தனர். பல இடங்களில் இந்த நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்யப்படவில்லை. இதற்கு காரணமாக இப்படி ஒரு வீடியோ பதிவு காட்டித்தான் தங்களின் தேச பக்தியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]