டில்லி:
இந்தியாவின் 71வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
டில்லியில் பிரதமர் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் முதல்வர்கள், கட்சி தலைவர்கள் கொடி ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினர்.
இந்நிலையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம், டூடுல் வெளியிட்டு கவுர வப்படுத்தியுள்ளது. கூகுள் தனது தேடு பொறி தளத்தில் இந்திய பாராளுமன்ற வடிவில் டூடுல் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள், விழாக்களின் போது அவற்றை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு வருவது வழக்கம்.
இதையடுத்து, கூகுள் நிறுவனம், இன்று இந்திய சுதந்திரத் தினத்தையொட்டி, இந்திய நாடாளுமன்ற வடிவில் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. இது இந்தியர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கூகுள் ஏற்கனவே இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி, தன் தேடு பொறி தளத்தில், கருப்பு ரிப்பன் ஒன்றை வடிவமைத்து ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.