நேபாள நாடல் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 200 இந்திய பயணிகள் சிக்கித் தவித்துவருகிறார்கள்.
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் 49 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 400க்கும் மேற்பட்ட கால்நடைகளும் பலியாகியுள்ளன. 36 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா தளமான சித்வானில் உள்ள சவுரகா பகுதியில் 600க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200 பேர் இந்தியர்கள்.
அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் வெளியேற முடியாமல், உணவு நீரும் இன்றி தவித்து வருகிறார்கள். இவர்களை காப்பாற்றும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.