மின்சாரம் தாக்கினாலும் பாதிப்பு ஏதும் ஏற்படாதது மட்டுல்ல.. அதையே “உணவாக “ எடுத்துக்கொள்ளும் மனிதன் இருக்கிறார் என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது?உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்தவர் நரேஷ் குமார். வயது 42. இவர் மீது மின்சாரம் தாக்கினாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதுகுறித்து நரேஷ் குமார் பேசுகையில், “ஒருமுறை மின்சார ஒயரை தொட்ட போது ஷாக் அடிக்க வில்லை. அதனால் மறுபடியும் முயற்சி செய்தேன். அப்போதும் எதுவும் ஆகவில்லை. இதன் பின் தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின், குளிர்சாதனப் பெட்டி என எல்லாவகையான மின்சார ஒயரையும் நான் வெறும் கையால் தொட்டிருக்கிறேன்.
சில நாட்களில் வீட்டில் உணவில்லாத போது மின்சார ஒயர்களை என் வாயில் வைத்து 30 நிமிடம் நிற்பேன். அதன் பின் என் பசி அடங்கி விடும் ” என்கிறார் இவர்.
இவரை இந்த பகுதி மக்கள், மின்சார மனிதன் என்று அழைக்கிறார்கள்.