டோக்ளம் (DOKLAM) தனது இடம் என்று சைனா கூறுவதால், மிகப்பெரிய பின்னடைவை அந்த நாடு சந்திக்க உள்ளது என்பதை நியூமராலஜி என்ற கலையின்மூலம் துல்லியமாக சொல்லாம். எப்பொழுதுமே சைனாவிற்கு இந்தியாவை பிடிக்காது, அநத காலக்கட்டத்திலேயே சைனா போர் தொடுத்து. பிறகு வியாபார யுக்திக்காக நட்புக்காட்டியது நம்முடன்.
நியூமராலாஜியில் பொதுவான விசயம். நட்பு, பகை என்ற எண்கள் உண்டு. இவையும் நாடுகள் போன்றதுதான்.
CHINA – 35151 (15) – 6 அதுபோல, INDIA – 15411 (12) – 3
6ம் எண்ணிற்கு ஒரு தனித்துவம் உண்டு. எப்படியாவது வாழ்க்கையில் உயர்வுபெற வேண்டும் என்பதுதான்.
3ம் எண்ணிற்கு ஒரு தனித்துவம் என்னவெனில் இப்படித்தான் வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டும் என்பதுதான் அது
‘இந்தியாவுக்கே டோக்ளம்’
டோக்ளம் என்ற பெயர் சமீபத்தில் மிகப்பிரபலம் அடைந்துள்ளது. இந்த இடம் நமது இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ளது. இந்த இடத்தின் இடப்புறம் இந்தியாவும், வலப்புறம் பூடானும், கீழ்ப்புறம் பங்களா தேஷும் அமைந்துள்ளது.
இந்திய பகுதியின் இடதுபக்கம் நேபாளமும் அமைந்துள்ளது. இவைகளுக்கெல்லாம் மேற்புறத்தில் சீனா அமைந்துள்ளது.
டோக்ளம் மிக அருகில் உள்ள பகுதிகள் இந்தியாவும், பூடானும் உள்ளடக்கிய ஒரு இடத்தின் உட்பகுதியில் கும்பி (CHUMBI) என்ற பள்ளத்திக்கில் டோக்ளம் உள்ளது. இதை சீனா தனது பகுதி என்று சொல்வது எந்த நாடும் ஒத்துக்கொள்ளாது.
நமது வீட்டின் முன்பகுதி, நமது கட்டுப்பாட்டில்தான் என்ற கோட்பாடு தான் உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது.
CHINA – 35151 கூட்டு எண் – 6
INDIA – 15411 கூட்டு எண் – 3
CHUMBI – 356421 =21 கூட்டு எண் – 3
DOKLAM – 472314 =21 கூட்டு எண் – 3
எனவே, சைனா டோக்ளம் சம்பந்தமாக இந்தியாவை எதிர்க்க எந்த முடிவு எடுத்தாலும் படு தோல்வியை சந்திப்பது உறுதி. இவ்விஷயத்தில் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படும் நிலைக்கு 2017=10 என்ற 1ம் எண் ஆண்டின் உதவியும் கூடுதலாக கிடைக்கும்.
சீனா என்ற 6ம் எண் (பெயர்) நாடு, இந்தியா என்ற 3ம் எண் நாட்டுடன் சண்டைக்கு வந்தால் கடுமையான நெருக்கடிக்கு அந்நாடு ஆளாகும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த DOKLAM 3-ம் எண்ணாக அமைவதாலும் இப்பகுதியில் உள்ள CHUMBI-3 என்ற இடத்தின் பெயர் எண்ணும் 3ஆக வருவதாலும் பல வழிகளில் சைனா நெருக்கடிகளை சந்தித்து, சரியான பாடம் கற்றுக்கொள்ளும் என்பது நிச்சயம்.
அப்புறம் என்ன கலாம் கண்ட கனவு நனவாகும் என்பது உறுதி.