திருவனந்தபுரம்,

விபத்தில் காயமடைந்த தமிழுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனை மறுத்ததால், காயமடைந்த அந்த தமிழர் பரிதாபமாக  உயிரிழந்தார். இதற்காக,  மன்னிப்புக் கோரியுள்ளார்  கேரள முதல்வர்! பினராயி விஜயன்.

தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி, சமீபத்தில் கொல்லம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஆனால், அவருக்கு, சிகிச்சை வழங்க, கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.

ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின், அவர் ஆம்புலன்சிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்நிலையில், இந்த பிரச்சினை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதயடுத்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இப்படிச் செய்ததன் மூலமாக, மருத்துவமனைகள் மிகப் பெரிய களங்கத்தை கேரளாவுக்கு ஏற்படுத்திவிட்டன. இது மிகக் கொடூரமான செயல். எதிர்காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க, சட்ட ரீதியாக, சில திருத்தங்களை அமல்படுத்துவோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.