சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட மதிமுகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது பிரதமர் மோடியின் கொடும்பாவியை அவர்கள் எரித்தனர். இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து வைகோ உட்பட மதிமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது வைகோ பேசியதாவது,
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவது மத்திய அரசின் வஞ்சகமான வேலை, நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மாநில அரசின் பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கேள்விகள் கேட்கக் கூடாது , மாநிலத்தின் பாடத்திட்டத்தன்படிதான் தேர்வு நடத்த வேண்டும் என்றும் வைகோ கூறினார்.
அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட மதிமுகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.