சென்னை:

ள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளா பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள், அது குறித்து தம்முடன் பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று கல்வித்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்திருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறைகூவலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அன்புமணியை வசை பாடியுள்ளார் தமிழிசை. ஜனநாயக கடமையை ஆற்ற தவறியவர் அன்புமணி, மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து கொடுத்த பிரிதிநிதித்துவத்தை தவறாக ஆக்கி விட்டார்.

பாராளுமன்றத்தில் பேசிவதில்லை, குறைந்த நாட்களே பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கெடுத்திருக்கிறார். குறைந்த கேள்விகளையே கேட்டிருக்கிறார்.

இந்நிலையில், அன்புமணி  அமைச்சர் செங்கோட்டையனை விவாதத்திற்கு அழைப்பது சரியானது அல்ல. இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் உள்ளன  என சல்ஜாப்பு கூறியுள்ளார் தமிழிசை.

தமிழிசையின் அமைச்சருக்கு ஆதரவான கருத்து… தமிழகத்தில் அதிமுகவை பா.ஜ. பின்புலத்தில் இருந்து இயக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது.