டில்லி:
ஹிந்தி நடிகர் அமீர்கான், அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் பன்றி காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல இந்தி நடிகரான அமீர்கான், அவரது மனைவியும் தயாரிப்பாளருமான கிரண் ராவ் ஆகியோர் சமீபத்தில் நடந்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.
தற்போது இவர்கள் இருவருக்கும் பன்றி காய்ச்சல் நோய் தாக்கி சிகிச்சை பெற்றுவருவதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அனுபமா சோப்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
‘‘அமீர்கானுக்கு முதலில் நோய் தாக்கியதாகவும், பின்னர் அது கிரண் ராவுக்கு பரவியது. இதன் காரணமாக இருவரும் பாணி அறக்கட்டளை நடத்தும் சத்தியமேவ் ஜெயத்தே வாட்டர் கப் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது’’ என்று இவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அமீர்கான் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தோன்றி தனது உடல் நிலை குறித்து தெரிவித்தார்.